June 2, 2023

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டி – தேமுதிக அறிவிப்பு!.

வர இருக்கு தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. நாங்கள் கேட்ட 23 தொகுதி களை ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டதாக தேமுதிக பார்த்தசாரதி கூறினார்.

கடந்த சில வாரங்களாக அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக விலகியுள்ளதாக கூறினார். தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும். தொகுதிகளையும் ஒதக்க மறுத்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களுடான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின், மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கட்சியின் தலைவரான விஜய காந்த் உத்தரவிட்டால், எந்த தொகுதியில் வேண்டுமாலும் போட்டியிடுவேன். அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே, 99 சதவீத தொண்டர்களின் விருப்பம் என அவர் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து பேச, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட, மற்ற கட்சிகள்தான் தேமுதிகவிடம் வரவேண்டும் எனவும், தேமுதிக யாரிடமும் கூட்டணிக்காக செல்லாது, எனவும் விஜய பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தான், தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.