தகவல் உரிமைச் சட்டம் – என் அனுபவம் By மாலன்

தகவல் உரிமைச் சட்டம் – என் அனுபவம் By  மாலன்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக. 2010-13 ஆகிய மூன்றாண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை, தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்,நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்பது போன்ற தகவல்களை அளிக்கக் கோரி 2013 நவம்பரில் தமிழ்க காவல்துறைத் தலைவருக்கு விண்ணப்பித்திருந்தேன். புதிய தலைமுறை வார இதழ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக ந்டத்திய கையெழுத்து இயக்கத்தின் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் திட்டமிட்ட அந்தத் தகவல்களைக் கேட்டிருந்தேன்.
R T I in TN
எங்களிடம் தகவலே இல்லை. நீங்கள் 33 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கும், 7 மாநகர ஆணையர்களுக்கும் தனித்தனியாக மனுச் செய்து பெற்றுக் கொள்ளுங்கள் என காவல்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்து விட்டது. இந்தக் கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. ஏனெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாவட்டங்களிடமிருந்து தகவல்கள் பெற்று குற்றச் செயல்கள் குறித்து அரசுக்கு அனுப்புகிற நடைமுறை ஒன்று உண்டு.

நான் என் முதல் மேல்முறையீட்டை செய்தேன். கிளிப்பிள்ளை போல, அல்லது சுட் அண்ட் பேஸ்ட் போல அதேபதிலை அதே வார்த்தைகளில் மேல் முறையீட்டு அதிகாரி தெரிவித்துவிட்டார்.நான் விடுவதாக இல்லை. ஆணையரிடம் மேல்முறையீடு செய்தேன். நேற்று அவர் முன் ஆஜராகும்படி எனக்கு அழைப்பாணை (சம்மன்) வந்தது. போயிருந்தேன்.என் தரப்பு வாதங்களை நானே எடுத்து வைத்தேன்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் அளித்துள்ள உரிமைகளைச் சட்டப்பிரிவுகளைச் சுட்டிக் காட்டி என் கோரிக்கையை வலியுறுத்தினேன்.

” ஒரு சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ மறுக்கப்பட முடியாத தகவல் எந்த ஒரு தனிநபருக்கும் மறுக்கப்படலாகாது “ என்ற 8வது சட்டப்பிரிவைச் சுட்டிக்காட்டியபோது ஆணையர் புன்னகைத்தார். சட்டப் பிரிவு 6(3)ஐச் சுட்டிக்க்காட்டிய போது அதை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என விளக்கமளித்தார்.இறுதியில் கேட்ட தகவல்களை இருவாரத்திற்குள் கொடுக்குமாறு காவல்துறைக்கு ஆணையிட்டார்.தகவல் உரிமைச் சட்டம் அளிக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி முன்னர் நான் வேறு துறைகளிடமிருந்து சிக்கல் ஏதுமின்றி தகவல்களைப் பெற்றிருக்கிறேன்.சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்புக் கொண்ட காவல்துறையிடம்தான் இத்தனை மெனக்க்கிட வேண்டியிருக்கிறது.

maalan

error: Content is protected !!