ட்விட்டரில் வொயிட் ஹவுஸை முந்திய நரேந்திர மோடி!

ட்விட்டரில் வொயிட் ஹவுஸை முந்திய நரேந்திர மோடி!

ட்விட்டர் கணக்கில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முந்தி உள்ளார். அதேபோல் மோடியின் பேஸ்புக் பக்கத்தை 18 மில்லியனுக்கு அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
Modi with laptop
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளங்களில் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில், இந்திய அரசியல் தலைவர்களிலேயே முன்னிலை வகிக்கிறார். தனது சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த தனது கருத்துக்கள் போன்றவற்றை சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் பொதுமக்களிடையே பகிர்ந்து கொள்கின்றார்.

இதன் காரணமாக, இளைஞர்களை ஈர்க்கும் தலைவராக மோடி இருக்கிறார். அந்த வகையில் ட்விட்டரில் மோடி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, மோடியின் ட்விட்டர் கணக்கை தற்போது 4,981,574 பேர் பின் தொடர்கின்றனர். அதேவேளையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் டிவிட்டர் கணக்கை 4,979,707 பேர் பின் தொடர்கின்றனர். அந்த வகையில், சுமார் இரண்டாயிரம் பின் தொடர்பவர்களை இந்திய பிரதமர் மோடி அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல் மோடியின் பேஸ்புக் பக்கத்தை 18 மில்லியனுக்கு அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

டிவிட்டரில் அதிகம் பின் தொடரும் தலைவர்களின் வரிசையில் மோடி தற்போது நான்காம் இடம் வகிக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் 6 வது இடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 43 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று முதல் இடம் வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, 9 மொழிகளில் டுவிட்டர் அக்கவுண்ட் வைத்துள்ள போப் பிரான்சிஸிற்கு 14 மில்லியன் பேர் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இவருக்கு அடுத்து இந்தோனேஷிய பிரதமர் சுஷிலோ பாம்பாங் யூதோனா 5 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

error: Content is protected !!