‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய வகை வைரஸின் போக்கு குறித்து Dr. பால் கருத்து!
இரண்டாம் அலையில் இருந்து உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அறிவியல் பூர்வமான விபரங்கள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன. இது புதிய வகை தொற்று வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் முழுமையான பதில் இல்லை. இதற்கு நாம் சில காலம் காத்திருக்க வேண்டும். தொற்று பரவலின் தன்மை என்பது நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. என்று நிதி ஆயோக் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் கொரோனா 2வது அலை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிக தீவிரமாக பரவியது. ஒரு நாள் பாதிப்பு சில நாட்களாக 4 லட்சத்தை கடந்து இருந்தது. இந்த 2வது அலைக்கு உருமாற்றம் அடைந்த ‘டெல்டா’ வகை வைரஸ் தாக்கமே காரணம்’ எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய உருமாறிய வைரஸ் வகை சமீபத்தில் கண்டறியப்பட்டது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.
இந்தநிலையில் 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடர்ந்து, கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. நாடுமுழுவதும் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து கொரோனா தடுப்பு படை தலைவரும், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:–கொரோனா 3-வது அலை எப்போது ஏற்படும் என்பதை கூற முடியாது. புதிய அலை உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் நம் கைகளில் உள்ளது. அடுத்தடுத்த அலைகள் எப்போது நிகழும் என்பது குறித்து தேதிகள் நிர்ணயிக்காமல் இருப்பது நல்லது. உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அறிவியல் பூர்வமான விபரங்கள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன.
இது புதிய வகை தொற்று வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது. அதுபோலவே தடுப்பூசியின் செயல்திறனை டெல்டா பிளஸ் பாதிக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் முழுமையான பதில் இல்லை. இதற்கு நாம் சில காலம் காத்திருக்க வேண்டும். தொற்று பரவலின் தன்மை என்பது நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது.” என்று அவர் தெரிவித்தார்.