டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு!

டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை  ஆன்லைனில் நடத்த முடிவு!

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி ஆன்லைனில் நடத்த தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

குரூப் 1, குரூப் 2 , குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முதற்கட்ட தேர்வான எழுத்துத்தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. கூறியுள்ளது. ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதும் நிலையில் முடிவுகளை விரைவில் அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் தேர்வு மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு அடுத்த ஆண்டிலிருந்து ஆன்லைனில் தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.சி. தேர்வு ஏற்கெனவே ஆன்லைனில் நடத்தப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் போட்டித்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!