டிடி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற வாய்ப்பு!

டிடி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற வாய்ப்பு!

நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் ‘தூர்தர்ஷன் பொதிகை’ தொலைக்காட்சியானது ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு  புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள் என்ற லட்சியத்துடன் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது. இவற்றில் நான்கு பொழுதுபோக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்களை கொண்ட ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி ஆகியவை அடங்கும். புதிய அம்சங்களுடன் மிளிரும் ‘பிரசார் பாரதி டிடி தமிழ்  தொலைக்காட்சி மண்டல செய்தி பிரிவு சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கீழ்க்காணும் பணிகளுக்குரிய தினசரி தேவை அடிப்படையிலான தற்காலிக பணியாளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

1.TAMIL NEWS READERS
2.NEWS REPORTERS – TAMIL
3.NEWS REPORTERS – ENGLISH
4.NEWS REPORTERS – HINDI
5.ASSISTANT NEWS EDITORS
6.VIDEO EDITORS
7.CAMERA ASSISTANTS
8.INPUT EDITORS
9.COPY EDITORS
10.ASSIGNMENT COORDINATORS
11.CG ARTISTS
12.SOCIAL MEDIA EXECUTIVES

அந்தந்த பணிகளுக்குரிய அடிப்படை இளங்கலை பட்டம்/ பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்ப படிவங்களை திரையில் காணும் https://sites.google.com/view/rnu-chennai/home என்ற இணைய இணைப்பில் பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பங்கள் 25 ஜூலை 2025 க்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு,

இயக்குநர் (செய்தி) / செய்திப்பிரிவு தலைவர்

டிடி தமிழ் தொலைக்காட்சி

எண் 5, சுவாமி சிவானந்தா சாலை,

சென்னை 600005,

ddtamilrnu@gmail.com

Related Posts

error: Content is protected !!