டாஸ்மாக் சரக்கு விலை 10% உயரப் போகிறது!

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை மேலும் அதிகரிக்கும் பொருட்டு மதுபானங்களின் விலையை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ரூ.80 முதல் ரூ.150 வரையிலான குவார்ட்டர் வகை பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்படுகிறது.இதுபோல் ரூ.180 முதல் ரூ.280 வரை உள்ள ஹாப் வகை மதுபானங்கள் னீ20 முதல் னீ30 வரையிலும், ரூ.400 முதல் ரூ.700 வரை விற்கப்படும் ஃபுல் வகை மதுபானங்கள் ரூ.50 வரையும் உயர்த்தப்பட உள்ளது. மேற்கண்டவாறு விலையை அதிகரிக்கும் போது 201415ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.1000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று தெரிகிறது.
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தமிழக அரசிற்கு, ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதனை நம்பியே, அரசு இலவச திட்டங்களை அளித்து வருகிறது. மதுக்கடைகளை மூட வேண்டும்; மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று எங்கும் குரல்கள் ஒலிக்கின்றன. இதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. டாஸ்மாக் கடைகளை மூடினால், அரசிற்கு ஏற்படும் நிதி இழப்பை வேறுவழியில் எப்படி சரிக்கட்டலாம்? நிதி ஆதாரங்களை உருவாக்க வழிகள் என்ன? யோசனைகளை பலரும் வழன்ஹ்கி வ்ரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். அண்மையில் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியொன்றில், ”டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ.23 ஆயிரத்து 401 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் விற்பனை வரியாக ரூ.17 ஆயிரத்து 533, கலால் வரியாக ரூ.5,868 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.26 ஆயிரத்து 295 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 812 கோடி விற்பனை வரியும், ரூ.6,483 கோடி கலால் வரியும் செலுத்த வேண்டிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.
அதாவது தமிழகத்தில் 2003ம் ஆண்டு முதல் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. 200304ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 201314ம் நிதியாண்டில் இது ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. இலவச மிக்ஸி, கிரைண்டர், ஆடு, கறவை மாடுகள், மின்விசிறி வழங்கும் திட்டங்களை நிறைவேற்ற டாஸ்மாக் வருமானம் தான் அரசுக்கு கை கொடுக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை மேலும் அதிகரிக்கும் பொருட்டு மதுபானங்களின் விலையை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ரூ.80 முதல் ரூ.150 வரையிலான குவார்ட்டர் வகை பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்படுகிறது.
இதுபோல் ரூ.180 முதல் ரூ.280 வரை உள்ள ஹாப் வகை மதுபானங்கள் னீ20 முதல் னீ30 வரையிலும், ரூ.400 முதல் ரூ.700 வரை விற்கப்படும் ஃபுல் வகை மதுபானங்கள் ரூ.50 வரையும் உயர்த்தப்பட உள்ளது. மேற்கண்டவாறு விலையை அதிகரிக்கும் போது 201415ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.1000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று தெரிகிறது.