செல்போன் தொலைந்து போச்சா? சத்தம் போட்டு அழையுங்க!

செல்போன் தொலைந்து போச்சா? சத்தம் போட்டு அழையுங்க!

செல்போன் தொலைந்து விட்டதா? வைத்த இடம் தெரியாமல் செல்போனை தேடுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிய புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது. அதுதான், குரலை அடையாளப்படுத்திக்கொண்டு, பதில் அளிக்கும் தொழில்நுட்பம். இதற்கு ‘‘மார்கோபோலோ அப்’ என்று பெயரிட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த மாட் வெய்செக் என்பவர் இதை வடிவமைத்துள்ளார்.
marcopolo  phone
மொபைல் போன் என்பது இன்றைய வாழ்க்கையில் முக்கியமானதாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் 2ஜி, 3ஜி தொழில்நுட்ப இணையதள வசதிகளுடன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை மினி கம்ப்யூட்டர் போலவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.விலை உயர்ந்த செல்போன்களை உபயோகிப்பவர்கள் அந்த போன் தொலைந்து விட்டாலோ, திருட்டு போனாலோ அதில் உள்ள ரகசிய பைல்கள், விபரங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில்தான், காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடிக்கும் வகையில் புதியதாக ஒரு சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார் அறியலாம். இதற்காக, ‘மார்கோ’ என்ற வார்த்தை அந்த செல்போனுக்கு பழக்கப்பட வேண்டும்.இதன்படி, செல்போன் தொலைந்து விட்டால், ‘மார்கோ’ என்று கூச்சலிட வேண்டும். உடனே, அந்த செல்போன், ‘போலோ’ என்று பதில் கூச்சல் எழுப்பும். அதன்மூலம், செல்போனை இருப்பிடத்தை அறியலாம்.

error: Content is protected !!