சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படம் பிப்ரவிர் 10 பிரைம் ஓடிடியில் ரிலீஸ்1

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படம் பிப்ரவிர் 10 பிரைம் ஓடிடியில் ரிலீஸ்1

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம்.

சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்கள் மகான் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

மும்பை, இந்தியா—10 ஜனவரி, 2022—இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளங்களில் ஒன்றான Prime Video இன்று கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் அதிரடிச் சித்திரமான மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. லலித் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். மகான் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிஜ வாழ்க்கையில் தந்தை-மகனான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 முதல் Prime Video -இல் பிரத்தியேகமாக உலகளவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

மகான் என்பது, தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கப்பட்ட ஒருவரின் கதையே மகான். அவர் தனது லட்சியங்களை எட்டினாலும் தனது மகன் அருகாமையில் இல்லாதது அவரை வாட்டுகிறது. கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவானாலும், ஒரு தந்தையாக வாழ வாழ்க்கை அனுமதித்ததா? இந்தப் பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இந்தக் கதை.

இந்தியாவில் Amazon Prime Video-இன் கன்டென்ட் லைசன்சிங் துறைத் தலைவர் மனிஷ் மெங்கானி கூறுகையில், “Prime Video-இல் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் நாடகமான மகானின் உலகளாவிய ப்ரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமையான நட்சத்திரங்கள் பங்கேற்கும் மகான் திரைப்படம் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு கடினமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு கதை. லலித் குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் இணைந்து இந்த அதிரடி பொழுதுபோக்குச் சித்திரத்தை எங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

“மகான் திரைப்படத்தை Prime Video-இல் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், நாடகம் மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர் மற்றும் எங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் Prime Video-இல் மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய பிரீமியர் மூலம் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”என்று தயாரிப்பாளர் லலித் குமார் கூறினார்.

error: Content is protected !!