சீன செயற்கைக்கோள்: -நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது!

சீன செயற்கைக்கோள்: -நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது!

நிலவின் தென் துருவத்தில் சீன செயற்கைக்கோள் தரையிறங்கியது. வரும் ஜூன் 25ம் தேதி மண் மற்றும் பாறை மாதிரிகளுடன் திரும்பும் என தெரிகிறது.

நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிய வரும் பத்தாண்டுகளில் மேலும் 3 ஆளில்லா விண்கலங்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே 3ம் தேதி அன்று விண்ணில், சாங்இ 6 எனும் விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலம் சீன நேரப்படி, இன்று காலை 06.23 மணியளவில் நிலவில் தரையிறங்கியது என சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பணிக்கு குயிகியோ -2 எனும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் துணைபுரிந்துள்ளது. 1.7 கிலோ எடையுள்ள பொருட்களை 2020ம் ஆண்டு சாங்இ 5 விண்கலம் எடுத்து வந்தது. வரும் ஜூன் 25ம் தேதி சாங்இ 6 விண்கலம் மண் மற்றும் பாறை மாதிரிகளுடன் திரும்பும் என தெரிகிறது. நிலவு குறித்த ஆராய்ச்சிகளில், அதன் தென் துருவம் அதிகம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இதனால் தென் துருவத்தில் இருப்பது என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய, பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது.

2030க்குள் நிலவில் சீன விண்வெளி வீரரை கால் பதிக்க வைப்பதே பீஜிங்கின் நோக்கமாக கொண்டுள்ளது.

error: Content is protected !!