சீனா இன்று புத்தாண்டு கொண்டாட்டம்: பிறந்த ஆண்டின் பேர் பன்றி!!

சீனா இன்று புத்தாண்டு கொண்டாட்டம்:  பிறந்த ஆண்டின் பேர் பன்றி!!

சீன மக்கள் புத்தாண்டை வெகு விமரிசையாக இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டை சீனர்கள் பன்றி ஆண்டு என அழைக்கிறார்கள்.

சீனாவில் விலங்குகள் பெயரில் புத்தாண்டு கொண்டாப்படுகிறது. சீனக் காலண்டரின் அடிப்படை யில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சுழற்சி இருக்கும். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மிருகம் சின்னமாக இருக்கும். எலி, எருது, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆண்டுகள் உள்ளன. அந்த மரபின்படி இந்த வருடம் பன்றி வருடமாக சீனாவில் மலர்ந்துள்ளது.

நாய் ஆண்டு முடிவடைந்து பன்றி ஆண்டு தொடங்குவதையடுத்து சீனாவில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு புத்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தாண்டை அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடவே சீனர்கள் விரும்புவர். குடும்பத்துடன் நேரம் செலவழித்துக் கொண்டாடும் விழாவாக சீனப் புத்தாண்டு உள்ளது.

சீனாவின் முக்கிய விழாவே இந்தப் புத்தாண்டுதான். வசந்த காலம் கொண்டாட்டம் என்றும் இந்தப் புத்தாண்டு சீனாவில் அழைக்கப்படுகிறது. நகரங்களைவிட்டு லட்சக்கணக்கான சீனர்கள் வெளியேறி வருகின்றனர். அரசு விடுமுறையாகவே ஒரு வார காலம் அளிக்கப்பட்டுள்ளதால் கொண்டாட்டம் கோலாகலமாகி வருகிறது.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் தலைநகர் பெய்ஜிங், உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டு கொண்டாத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மக்கள் ஆடல் பாடலுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

சீன மக்கள் விதிகளில் அனைவரும் ஒன்று சேர்ந்து இசை வாத்தியங்கள் இசைத்தும், நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சீன மக்கள் கோலாகலமாக கொண்டாட்டத்துடன் பன்றி ஆண்டை வரவேற்றனர்.

error: Content is protected !!