சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையின் பெற்றோர்களுக்கு உதவும் அப்ளிக்கேஷன் தயார்!

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையின் பெற்றோர்களுக்கு உதவும் அப்ளிக்கேஷன் தயார்!

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு சவாலான காரியம்தான். நாம் கொடுக்கும் உணவை, சில சமயம் வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் ரொம்பவும் குறைவு. பெரும்பாலான குழந்தைகள் நாம் கொடுக்கும் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடுவார்கள்.இதை கவனத்தில் கொண்டு பிரிட்டனில் Loughborough பல்கலைக்கழகத்தில் உள்ள குழந்தை உணவு நிபுணர்கள், அடம்பிடித்து உண்ணாமல் இருக்கும் குழந்தையின் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் ஒரு அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர்.
child-feeding-guide-app-
இந்த அப்ளிக்கேஷன், முதலில் அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் அறிந்து கொண்டு, குழந்தைகள் ஏன் அடம்பிடித்து உண்ணாமல் இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்வதற்கு மற்றும் என்ன செய்தால குழந்தைகளை சாப்பிட வைக்க முடியும் என்பதற்கும் உதவி புரிகிறது. இந்த அப்ளிக்கேஷனுடன் இணைந்து ஒரு வலைத்தளமும் வருகிறது. இந்த இரண்டுமே பெற்றோர்கள் தங்கள் குழுந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம் மற்றும் எப்பொழுது கொடுக்கலாம் என்று தெரிவிக்கிறது. மேலும், மாறுபட்ட மற்றும் சீரான உணவு சாப்பிட குழந்தைகளை ஊக்குவிக்க உதவும் குறிப்புகள் மற்றும் கருவிகளை வழங்கிறது.

உணவு குறைபாடுகள் பற்றிய ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மையத்திலிருந்து (LUCRED) எம்மா ஹேக்ராஃப்ட், ஜெம்மா விட்காம்ப் மற்றும் கிளாரி பாரோ ஆகியோர்கள் இந்த அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர். எமது ஆராய்ச்சியில் 50% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அடம்பிடித்து உண்ணாமல் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். இதில் மன அழுத்தம் கொண்ட பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பார்த்துக்கொள்பவர்கள் அவர்களின் நடவடிக்கைகளை எப்படி அறிந்துகொள்வார்கள் என்பதை புரிந்து கொண்டோம் என்று ஹேக்ராஃப்ட் கூறியுள்ளார்.

உண்ணாமல் இருக்கும் குழுந்தையின் பெற்றோர்களுக்கு மிக சிறந்து கருவியாக குழந்தை உணவு வழிகாட்டி இருக்கும். எங்களுடைய அறிவை பகிர்ந்து மற்றும் நடைமுறை குறிப்புகளை வழிங்கி குழுந்தைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் சாப்பிட ஊக்குவிக்கும் வகையில் பெற்றோர்களுக்கு ஆதரவாகவும் மற்றும் நம்பிக்கையை கொடுக்கிறோம் என்றும் ஹேக்ராஃப்ட் கூறியுள்ளார்.

error: Content is protected !!