சாதாரண ரக ஃபோன்கள் மூலமே பணப்பரிமாற்றம்! விரைவில் அறிமுகம்!
உலகளவில் மொபைல் போன் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை, வரும் 2014ம் ஆண்டில் 24 ஆயிரத்து 500 கோடி டாலர் (11 லட்சத்து 52 ஆயிரம் கோடி) அளவிற்கு உயரும் என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லாத சாதாரண ரக ஃபோன்கள் மூலமே பணப்பரிமாற்றம் செய்யும் புதிய வசதி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இச்சேவையை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக தேசிய பணப் பட்டுவாடா ஆணையம் வங்கிகளின் சார்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
தற்போது வலைதளங்களை பயன்படுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் கூகுள் வலைதளத்திற்கு இணையாக பேஸ்புக்கும் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைதளம், தற்போது மேலும் ஒரு புதிய சேவையை துவக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், பேஸ்புக் இணையதளம் மூலம் வங்கியில் நடப்பது போல பணிப் பரிமாற்றம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை வங்கிகள் அளிக்கும் “இன்டர்நெட் பேங்கிங்” வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை அனுப்பிவிட முடியும்.
இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் பேஸ்புக் கணக்கையே பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்துகொள்ளலாம். தற்போது இந்த சேவையை துவக்குவதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடந்து வரும் சூழ்நிலையில் ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லாத சாதாரண ரக ஃபோன்கள் மூலமே அதிலும் இணையதள வசதி இல்லாமலேயே ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்ற முடியும். இந்தச் சேவையை பெறுவதற்கு ஒரு ரூபாய் 50 காசு கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவையை கொண்டு செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சேவை வழங்கப்பட உள்ளது. மேலும் இச்சேவையால் வங்கிகளின் நிர்வாகச் செலவுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.