June 1, 2023

கோச்சடையான் மே -23ல் ரிலீசாவதிலும் சிக்கல்?!

கோச்சடையான்’ திரைப்படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 23-ம் தேதி ரிலீஸாகுமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களிலும் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.விசாரித்த போது,கோச்சடையான்’ படத்துக்காக வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான ஒப்புதல் கடிதம் புதன்கிழமை (இன்று) கிடைத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 23-ல் படம் ரிலீஸாகும். திரையரங்குகளில் இன்று முன்பதிவு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
kocchadai
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து, அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்பு சில தொழிற்நுட்ப காரணங்களுக்காக 23ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது வரை தனியார் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதனால் இன்னமும் ரிலீஸில் சிக்கல் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், உள்நாட்டில் வெளியிடுவதில் உள்ள சிக்கல் எளிதில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடும் எஃப்.எம்.எஸ். உரிமம் தொடர்பான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. வெளிநாட்டுக்கு பிரின்ட்களை அனுப்புவதற்கான பணிகளும் நடந்து வருகிறதாம்.

ஆனால் சென்னையில் அபிராமி, தேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சில திரையரங்குகளைத் தவிர மற்ற திரையங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை வரை முன்பதிவு தொடங்கவில்லை. சத்யம் திரையங்கத்தில் செவ்வாய்க்கிழமை வரை டிக்கெட் முன்பதிவு நடைபெறவில்லை. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் முன்பதிவு தொடங்கவில்லை.‘கோச்சடையான்’ படத்துக்காக வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான ஒப்புதல் கடிதம் புதன்கிழமை (இன்று) கிடைத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 23-ல் படம் ரிலீஸாகும். திரையரங்குகளில் இன்று முன்பதிவு தொடங்கும் என்று கூறப்படுகிறது.