கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உண்ணாவிரதம் – ஆய்வு ரிசல்ட்

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உண்ணாவிரதம் – ஆய்வு ரிசல்ட்

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப் படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது. குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
fasting and colestral
இந்நிலையில் மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு, மனித உடலில் சேரும் கொழுப்பு சத்துதான் காரணமாக உள்ளது என்றும் ஆனால் உண்ணாவிரதம் உடலில் சேரும் கொழுப்பை இயற்கையாகவே குறைக்க உதவுகிறதாம். தண்ணீர் மட்டும் அருந்திப் பிற உணவுகள் அனைத்தையும் மறுத்தலே சிறப்பான உண்ணாவிரத முறை என்று பன்னெடுங்காலமாக கருதப்பட்டு வந்தது என்றாலும், அண்மைக் காலமாக பல இயற்கை மருத்துவர்களும், உணவியல் அறிஞர்களும் தண்ணீர் மட்டும் அருந்தி உணவு மறுத்திருப்பதைக் காட்டிலும் பழச்சாறு மட்டும் அருந்தி, உண்ணாவிரதம் இருத்தல் சிறந்தது என கருதுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கின்றபோது உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள்களும் கழிவுகளும் எரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. இந்நிலையில் தண்ணீரை அருந்துவதை விடக் காரச்சத்துக் கொண்ட (Alkaline) பழச்சாறுகள் குடித்தால் இந்தத் தூய்மைப்படுத்தும் பணிக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் யூரிக் அமிலமும் பிற கனிம வேதி அமிலங்களும் எளிதாக வெளியேற்றப்படுகின்றன. பழங்களிலுள்ள பழச்சர்க்கரை இதயத்தை வலுப்படுத்த வல்லது. காய்கறி மற்றும் பழச்சாறுகளில் உள்ள உயிர்ச்சத்துக்களும், கனிமப் பொருள்களும் உடற்செயற்பாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மிகவும் ஏற்றவையாகும் என்று ஸொல்லி௯ வந்தார்கள்

இதனிடையே அமெரிக்காவின், இன்டர்மவுன்டன் மெடிக்கல் சென்டரில் நடந்த ஒரு ஆய்வில், உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு இயற்கையாகவே குறைந்துவிடுவது தெரிய வந்துள்ளது. மேலும், நீரிழிவு நோயும் மட்டுப்படுகிறதாம். அதிலும் உண்ணாவிரதம் முடித்த பிறகு உங்களது நுகரும் திறனும், சுவையுணர்வும் பன்மடங்கு அதிகமாகும். இதனால் உமிழ்நீர் சுரப்பும் அதிகரிக்கும். உணவுகள் சுவை மிகுந்து காணப்படும். கண்களும், காதுகளும் கூர்மையாகும். உடல் செயல்பாடும் சுறுசுறுப்பும் கூடும். செய்கின்ற பணியில் ஆர்வமும், திறனும் ஏற்படும். உண்ணாவிரதம் இருப்பவர்களுக்குத் தொந்தியும், தொப்பையும் குறைவதோடு வாழ்நாளும் அதிகரிக்கும்.ஆக இந்தியாவில், தொன்று தொட்டு பல்வேறு உண்ணாவிரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ?

error: Content is protected !!