குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்ட பெண்கள் ஆயுள் நீடிப்பு!

குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்ட பெண்கள் ஆயுள் நீடிப்பு!

இன்றைய காலத்தில் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது. இவ்வாறு 35 வயதான பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் 33 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகள் தேவையில்லை என்றும் அவர்களுக்கு ஆயுள் காலம் பலமாக இருக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
pregnant-woman
அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தை சேர்ந்த பல்கலைகழகம் ஒன்று ஆய்வு செய்து இதை தெரிவித்துள்ளது.இந்த , 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த பெண்களுடன் ஒப்பிடுகையில் தமது இறுதிக் குழந்தையை 33 வயதுக்குப் பின்னர் பிரசவித்த பெண்கள் 95 வயது வரை வாழ்வது இரு மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்களுக்கு முப்பது வயதிலிருந்தே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. நாற்பது வயதுக்கு மேல், மேலும் அதிக சதவிகிதத்தில் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.எனவே நீண்ட காலம் வாழ்வதற்காக பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் வாழும் 551 குடும்பங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!