குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்! ஜுன் -12

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்! ஜுன் -12

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர், இதில் 10 கோடி பேர், பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என ‘யுனிசெப்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் என, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) இலக்கு நிர்ணயித்துள்ளது. மையக்கருத்து: குழந்தை தொழிலாளர்கள் பெரும்பாலும் ஓட்டல்களில் பெஞ்ச் துடைப்பது, பெரிய தொழிற்சாலைகளில் சுத்தம் செய்வது போன்ற பணிகளுக்குத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்கள் வளர்ந்த பின்னும் கூலியாக மட்டுமே வாழ முடிகிறது. இதிலும் சிலர் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர்.அதேபோல், சிறுவயதிலேயே வேலைக்கு செல்லும் குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடும், மனரீதியாக பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள், சிறு வயதிலேயே கல்வி அறிவு பெறவேண்டும். என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே இந்த குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் ஏற்படுத்தப்பட்டது.

உலகில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாக உள்ளது. சில குழந்தைகள் பள்ளி முடிந்தவுடனும் பகுதி நேரமாகவும் வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்படமாட்டார்கள். ஆனால் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம், சமூகம் ஆகியவை பாதிக்கும் வகையில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது குற்றம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது. இந்திய அரசும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் என தெரிவித்துள்ளது. உலக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் 12 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இது இந்தியாவில் இப்பிரச்னை எந்தளவு மோசமாக உள்ளது என்பதையே காட்டுகிறது. விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகளை வேலைக்கு வைக்கின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில், விடுமுறை இன்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்க்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சிலர் வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
World_Day_Against_Child_Labour
இப்படியான குழந்தை தொழிலாளர்கள் முறையை தடுக்க இந்தியாவில் தனி சட்டமே ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், இன்னும் குழந்தை தொழிலாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேதனையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. இவர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதனிடையே இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் மையக்கருத்துகள்.

* சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்த, சமூக பாதுகாப்பு விதி எண்.202யை செயல்படுத்துதல்.

* தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு உதவுதல்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்.

* பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்.

error: Content is protected !!