குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை!.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை!.

ந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 16வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் , எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் நடைபெற்றது. இதில், ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திரெளபதி முர்முவின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில், அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் கொண்டாட்டங்களுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.

இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு 2 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. திரௌபதி முர்மு 2,32,400 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதன்படி திரௌபதி முர்மு – 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா- 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!