கிரிக்கெட் :கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

கிரிக்கெட் :கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

சென்னையில் முதல் இரு டெஸ்டுகள் நடைபெற்ற நிலையில் கடைசி இரு டெஸ்டுகள் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளன. 3-வது டெஸ்ட் பிப்ரவரி 24 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் கடைசி இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு டெஸ்டுகளில் இடம்பெற்ற அதே அணி மீண்டும் தேர்வாகியுள்ளது. ஆஸ்திரேலி யாவில் ஏற்பட்ட காயத்தால் நாடு திரும்பிய உமேஷ் யாதவ், முழு உடற்தகுதியுடன் இருந்தால் இந்திய அணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார். அப்படி அவர் தேர்வானால், ஷர்துல் தாக்குர், விஜய் ஹசாரே போட்டியில் விளையாட அனுப்பப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சஹா, ஆர். அஸ்வின், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ்.

வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள்: அங்கித் ராஜ்புத், அவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கெளதம், செளரப் குமார்.
மாற்று வீரர்கள்: கே.எஸ். பரத், ராகுல் சஹார்.

அபிமன்யு ஈஸ்வரன், ஷாபாஸ் நதீம், பிரியங் பஞ்சால் ஆகிய மூவரும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விஜய் ஹசாரே போட்டியில் விளையாட அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!