கிடா பூசாரி மகுடி – ஆல்பம்

கிடா பூசாரி மகுடி – ஆல்பம்

தமிழ் திரை விருட்சகம் சார்பாக தமிழ்மணி தயாரிக்கும் புதிய படம் ‘கிடா பூசாரி மகுடி’. இதில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம் தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த நட்சத்திரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, செவ்வாளை ராசு, போண்டாமணி, கலைராணி, கம்பம் மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.ஜெயக்குமார். இவர் இயக்குனர்கள் வேலு பிரபாகரன், ராம் பிஸ்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இசையமைப்பாளர் இளையராஜாவிடம் படத்தை போட்டுக் காண்பித்துள்ளனர் படக்குழுவினர். படத்தை பார்த்து முழு திருப்தியடைந்த பிறகே இப்படத்தில் இசையமைக்க இளையராஜா ஒத்துக் கொண்டுள்ளார். ரவி ஸ்ரீனிவாசன் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, திருமணத்துக்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் பிடித்து வாழ்வது மட்டும் காதல் அல்ல. திருமணத்துக்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் காதல் உள்ளது என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம்தான் ‘கிடா பூசாரி மகுடி’. இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஜானி படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த முடிவெட்டுகிறவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் ரஜினி நடித்திருந்த கெட்டப்பிலேயே நடிக்கிறார். ஆனால், அவரை கிண்டல் செய்கிற அளவுக்கு இருக்காது என்றார். படத்தின் தலைப்பு குறித்து கூறும்போது, இப்படத்தின் நாயகனுடைய பெயர்தான் மகுடி. அந்த ஊர் காவல் தெய்வத்துக்கு இவன்தான் காவல்காரனாக இருக்கிறான். அதனாலேயே இப்படத்திற்கு ‘கிடா பூசாரி மகுடி’ என பெயர் வைத்தோம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது என்றார்.

Related Posts

error: Content is protected !!