கண்களில் எரிச்சலா ? – கொரோனா அறிகுறியாக இருக்கலாமாம்!
நம்மை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சில வகை அறிகுறிகள் ஏற்படும் என்று, ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம், மற்றும் சிடிசி சில பட்டியலை வெளியிட்டிருந்தது. இதுதவிர, அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், தகவல் வெளியானது. ஆகொரோனா கிருமி மனித உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதற்கு அதிகபட்சமாக 14 நாட்கள் ஆகும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள புரிதல். இது தான் இன்குபேஷன் காலமாகும். அறிகுறிகள் வருவதற்கு முன்னாலேயே ஒருவர் அந்த வைரஸை மற்றவருக்கு பரப்ப முடியும் என்பதால் தான் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை யாக எந்த தொற்றுநோயாக இருந்தாலும் இரட்டை தனிமைப்படுத்தல் காலம் கடைப் பிடிக்கப்படுகிறது. முன்னதாக சி.டி.சி, முன்பு வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறி பட்டியலில், இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை இருந்தன. ஆனால் இப்போது கூடுதலாக 6 வகை அறிகுறிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு இருந்தாலும், பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 6 அறிகுறிகள் 1) கடுமையான குளிர் 2) குளிருடன் உடல் நடுக்கம் 3) தசை வலி 4) தலைவலி 5) தொண்டை வலி 6) சுவை அல்லது வாசனை இழப்பை உணர்வது என்றெல்லாம் இருந்த சொல்லி இருக்கும் நிலையில் தற்போது கண்களில் எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டால் அது கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆம்.. சீனாவில் தொடங்கி, உலகின் எண்ணற்ற நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுப்பதிலும் மற்றும் அந்த தொற்றுப் பரவலிலும் கண்கள் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றக்கூடுமாம். அதாவது ஒவ்வாமை அல்லது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் கண்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் வலிக்கு கஞ்சக்டிவைடிஸ் (conjunctivitis) என்று பெயர். பொதுவாக இந்த பிரச்சினைகளுடன் வருபவருக்கு மருத்துவர்கள் அதற்கான மருந்தைக் கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் தற்போது இந்த பாதிப்புடன் வருவோரை தனிமைப்படுத்தி அவர்களிடம் பயண விவரங்கள் கேட்கப்பட்டு ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் கண்கள் வழியாகவும் பரவ வாய்ப்பு உள்ளதால் மருத்துவர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கண் மருத்துவர்கள் விவரிக்கையில், “கொரோனா வைரஸ் கண்கள் மூலமாகவும் பரவும் என்பதால் எங்கள் மருத்துவர்கள் கஞ்சக்டிவைடிஸ் பாதிப்புடன் வருவோருக்கு உடல் பாதுகாப்பு கவச ஆடையை அணிந்து தான் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். கடந்த 40 நாட்களில் சுமார் 20 ஆயிர பேர் கஞ்சக்டிவைடிஸ் பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டுள்ளது: என்று தெரிவித்தார்கள்.
மொத்தத்தில் இந்த வைரஸ், நுண் திரவத்துளிகளால் / தொடர்பால் / காற்றிலுள்ள ஆதாரத்தால் பரவக்கூடும்.
* தொற்று பரவலுக்கான மிக பொதுவான வழிமுறையாக இருப்பது சுவாச உறுப்புகளிலிருந்து வெளிவரும் நுண்திரவ துளிகளாகும். (இருமல் மற்றும் தும்மல்)
* வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள ஒரு பொருளை , பொருளின் மேற்பரப்பை மக்கள் தொடும் போது மற்றும் தங்களது கண்கள்/மூக்கு/வாயை தொடுவதன் மூலம் தொற்றுப்பரவல் நிகழக்கூடும்.
* விழிவெண்படல அழற்சி (மெட்ராஸ் ஐ)நோய் பாதிப்புடன் ஏரோசால் தொடர்பின் வழியாக வும் மற்றும் கண்ணிலிருந்து வெளிவரும் சுரப்புகளின் வழியாகவும் தொற்றுப்பரவல் நிகழ சாத்தியமிருக்கிறது.
* அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த நபர்களுக்கு சுவாசப்பாதைதொற்று அறிகுறிகளோடு விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
விழிவெண்படல அழற்சியானது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதன் முதன்முதல் சுட்டிக்காட்டலாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள சாத்தியமுள்ள நோயாளிகளை பரிசோதிக்கின்ற முதல் மருத்துவ பணியாளராக கண் மருத்துவ நிபுணர்கள் இருப்பதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கிறது.
கொரோனா வைரஸ், விழிவெண்படல அழற்சியை விளைவிக்கிறது மற்றும் கண் இமைகளுக்கு உட்புறத்திலுள்ள திசு படலமான கண்அழற்சியோடு ஏரோசல் தொடர்பின் வழியாகவும் அநேகமாக இது பரவக்கூடும்.
விழி வெண்படல அழற்சியின் அறிகுறிகள் என்ன ?
கண்சிவத்தல், கண்ணிலிருந்து நீர்வடிதல், கண்எரிச்சல், வலி, பூளை சுரப்பு மற்றும் போட்டோ ஃபோபியோ ஆகியவை விழிவெண்படல அழற்சியின் அறிகுறிகளாக இருக்கின்றன. தொற்று பாதிப்புள்ள கண்ணிலிருந்து வெளிவரும் சுரப்பு, தொற்று பரவலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கக்கூடும். என்றெல்லாம் தகவல் வருகிறது