ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ-வில் தங்கத் தமிழ் மகன் விருது! – வீடியோ!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ-வில் தங்கத் தமிழ் மகன் விருது! – வீடியோ!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் தங்கத் தமிழ் மகன் விருது இன்று வழங்கப்பட்டது.

முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்காவில் 10 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றார். இந்நிலையில் இன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கத் தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அதிகாரிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 17-ம் தேதி துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகம் திரும்புகிறார்.

Related Posts

error: Content is protected !!