ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள்!

ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உலகையே உலுக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவிலிருந்து 18 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.மேலும் இந்த 18 பேர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதரங்களை அந்த அமைப்பே வெளியிட்டுள்ளது.அது மட்டுமின்றி சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்தனர் என்று மத்திய புலனாய்வு பிரிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.
indian in isis
மகாராஷ்டிராவில் புனே நகரில் இரு தினங்களுக்கு முன்பு காவல் நிலையம் அருகே குண்டுவெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு படையினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதற்காக தீவிரவாதிகள் ஆன்லைன் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டதையும் உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தானே நகரின் இரண்டு வாலிபர்கள் உள்பட 18 இந்தியர்கள் ஈராக்கில் தாக்குதலை நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,இவர்கள் அனைவரும் சிங்கப்பூர் வழியாக ஈராக் சென்று தீவிரவாத படையில் இணைந்துள்ளனர். இவர்களில் ஏற்கனவே 6 பேர் ஈராக் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் ஆன்லைன் மூலமாக ஆதரவு திரட்டியுள்ளனர் என்றார்.

error: Content is protected !!