எக்கச்சக்கமாய் எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் விலகி விட்ட விழித்திரை!

எக்கச்சக்கமாய் எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் விலகி விட்ட விழித்திரை!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி, சாப்பாட்டுக்கு மட்டுமல்ல… செல்போன் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு இரவில் எக்கச்சக்கமான செய்தி அனுப்பி கண்பார்வையை இழக்கும் அபாயகட்டத்தில் இருக்கிறார்.
blind by sms
நெருக்கமானவர்களுடன் உரையாடுவதற்கான வி-சாட் என்ற மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி இரவு பகலாக தன் காதலிக்கு செய்தி அனுப்பியதால் அவரது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருட்டில் அவர் தொடர்ந்து சாட்டிங் செய்ததால் விழித்திரை கிழிந்து விலகியுள்ளதாக மருத்துவ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விழித்திரை விலகினால் உள்வரும் ஒளிக்கதிர்களிலிருந்து தெளிவான படத்தைப் பெற முடியாது. இவ்வாறு விழித்திரை விலகல் பெரும்பாலும் கிட்டப்பார்வை உடையவர்களுக்கே ஏற்படுகிறது. இவர்களுக்கு கண் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தென்படும். கரும்புள்ளிகள் அதிகரிக்கும். இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை முற்றிலும் பறிபோகும். செல்போனில் அளவுக்கு அதிகமாக சாட்டிங் செய்ததால் இப்போது விழித்திரை விலகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சீன வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் கண்பார்வை நீடிக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!