உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15

ஹெல்பேஜ் இந்தியா அமைப்பினர் கடந்தாண்டு எடுத்த முதியோர் வன்கொடுமை குறித்த ஆய்வில் மத்திய பிரதேசத்தில் அதிகமான அத்துமீறல்களும் ராஜஸ்தானில் குறைவான அத்துமீறல்களும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் 31 சதவீதம் முதியோர் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் 27.56 சதவீதத்தினர் கொடுமைக்கு ஆளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குடும்ப மானம் கருதி பல முதியவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியே சொல்வது இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
old Vs young
இன்று முதியவர்களை மதித்தல் என்பது மிகவும் குறைந்துள்ளது என்ற காரணத்தால் , முதியோர் இல்லங்கள் நிரம்பி வழியும் காலமாக உருவெடுத்துள்ளது. நம்மை தாலாட்டி , சீராட்டி வளர்த்த அன்பு நெஞ்சங்களை , முட்கள் பொருத்திய காலணிகளை அணிந்த கால்களால் உதைத்து விடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வலியும், வேதனையும் கொண்டு தன் இளமையை நமக்காக செலவழித்து , தம் உதிரத்தை சிந்தி நம்மை பாசத்தால் வளர்க்கும் பெற்றோர்கள் நம் இல்லங்களை தவிர்த்து , முதியோர் இல்லங்களை நிரப்புகின்றனர் என்பதால்தான் உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் கடைப் பிடிக்கப் படுகிறது.

முதியோரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு போலீஸ் கமிஷனரும் அனைத்து காவல் நிலையங்களிலும் எஸ்ஐ மற்றும் சிறப்பு எஸ்ஐ தலைமையில் குழுவை அமைத்துள்ளனர். இவர்கள் முதியோர் பிரச்னையை தீர்ப்பார்கள். மேலும் அவ்வப்போது விழிப்புணர்வு முகாமையும் நடத்துகிறார்கள். உதவி தேவைப்படும் முதியவர்களில் சிலர், யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். சிலர் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகின்றனர். உதவி தேவைப்படும் அந்தநத ஊரிலிருந்து முதியவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம். உடனடியாக அவர்களுக்கு உதவி அளிக்கப்படும். மேலும், முதியோருக்கு என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு பிரிவு உள்ளது (044 2345 2320). அதிலும் தொடர்பு கொள்ளலாம். உதவி கேட்கும் முதி யோரை ரோந்து காவலர்கள் கண் காணிப்பார்கள். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.

error: Content is protected !!