உலக அளவில் தடை செய்யப் பட்ட கஞ்சா! – கொஞ்சம் அலசல் By கிருத்திகா தரன்!

உலக அளவில் தடை செய்யப் பட்ட கஞ்சா! – கொஞ்சம் அலசல் By கிருத்திகா தரன்!

பெரும்பாலும் கற்று கொள்ள என் காதுகளை, மனதை திறந்தே வைத்திருப்பேன்..முக்கியமாய் குழந்தைகளிடம் இருந்து..அங்குதான் புதிய விஷயங்கள் பிறக்கும்..என் பதினைநது வயது பையனிடம் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஹூக்கா பார் (இரு கல்லூரிகள் அருகே ) மூடி,தடை செய்யப்பட்டதை பற்றி பேசி கொண்டிருந்த பொழுது விவாதித்த தகவல்கள்தான் இது…இந்த கட்டுரையை உங்கள் விருப்பத்தின் கீழ் படிக்கவும்..இது வெறும் தகவல்கள் மட்டுமே..சரி,தவறு என்று கூறவில்லை..இதற்கு எதிர்ப்போ,ஆதரவோ என் சம்பந்தபட்டது இல்லை.வெறும் கேட்டறிந்த,படித்தறிந்த உண்மைகளை பகிர்கிறேன்.

புகையிலையின் விபரீதங்கள் அனைவரும் அறிந்ததே…
உலக அளவில் வருடத்திற்கு இருபது லக்ஷம் மனிதர்கள் அதில் இறக்கிறார்கள்.ஆனால் ஒரு வித்தியாசமான,ஆச்சர்யமூட்டும் செய்தியை அறிந்து கொண்டேன் ….அதை பற்றிதான் இந்த கட்டுரை

நாம் கஞ்சா என்று அழைக்கும் போதை மருந்து ஒவ்வொரு நாtட்டிலும், பகுதியிலும் விதவித பெயர்களில் அழைக்கபடுகிறது .Marijuana,herb,weed போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது .அது உலக அளவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து.ஆனால் அதன் இறப்பு விகிதம் பற்றி யாருக்காவது தெரியுமா ? ஆச்சர்யமூட்டும் உண்மை கஞ்சாவால் யாரும் இறந்ததே இல்லை..
nov 24 - health marijuana weed seeds
ஆனால் கஞ்சா உலக அளவில் ஏன் தடை செய்யப்பட்டது ?

இந்தியாவில் ஹிமாலய யோகிகள் நூறு வருடங்கள் மேல் வாழ்ந்தவர்களுக்கு கேன்சர் வந்தது இல்லை..அதில் பெரும்பாலானவர்கள் கஞ்சாவை உபயோகித்து சிவலோகத்தை தரிசித்தவர்கள்..இன்றும் உபயோகிப்பவர்கள் உள்ளனர்.

அப்புறம் ஏன் இது தடை செய்யப்பட்ட போதை மருந்தாக ஆனது?

பத்தொன்பாவது நூற்றாண்டில் இது அமெரிக்காவில் கஞ்சா விளைச்சல் அடிப்படையில் அமைந்த பொருளாதாரம் ஏற்றம் பெற்றிருந்த காலம்..கயிறு,பைகள்,உடைகள் ,பேப்பர் என்று பொருளாதார கட்டமைப்பே அதன் மூலம் கட்டப்பட்டு இருந்தது.

ஆனால் அமெரிக்காவில் counter culture movement 1970 களில் நடந்தது.இந்த இயக்கம் நடந்து கொண்டிருந்தபொழுது கலாச்சார புரட்சியாக ஹிப்பி சமூகம் உருவாகியது.இவர்கள் கஞ்சாவை அதிக அளவில் உட்கொண்டு ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த துணிந்தது.அங்கு நேரடி பொருளாதராம்(materialistic) வாழ்வை மேற்கொண்டிருந்த பலர் சிந்தனையலில் (ideology ) அடிப்படையில் வாழ்க்கை முறையை மாற்றி கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் இந்திய யோகிகள்,சாமியார்கள் புகழ் அமெரிக்காவில் வேகமாக பரவியது.

அதே சமயத்தில் அமெரிக்கா வியட்நாமுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டு இருந்தது.ஆனால் இந்த ஹிப்பி இயக்கங்கள் போரை வெறுத்து அன்பின் அடிப்படையில் வாழ முனைந்ததால் போரை வலுவாக எதிர்த்தனர்.அப்போது உள்நாட்டில் அமைதியும் ,போருக்கு ஆதரவையும் திரட்ட ஹிப்பி இயக்கத்தை முடக்க அல்லது வலுவிழக்க முடிவு செய்தார்கள்.அதே சமயத்தில் போதை மருந்து ஹிப்பிகள் நடுவில் அதிக அளவில் புழங்கியது.அதனால் போதை மருந்தை முழுக்க தடை செய்ய முடிவு செய்தார்கள்.இதான் கஞ்சா தடை செய்யப்பட காரணம்.

ஆனால் அதற்க்கு அமெரிக்கா அளித்த காரணம்

1.கஞ்சா என்பது (stepping drug ) முதல் படி போதை ..இதை உபயோகித்தவர்கள் அடுத்தபடியாக ஹெரோயின்,கோகைன் போன்றவைகளை உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.ஆனால் ஆல்கஹால் ,புகையிலை உபயோகிப்பவர்களும் அடுத்தபடி போதை மருந்துகளை தேடுகிறார்கள்.அதுவும் நிஜம்.

2.கஞ்சாவை தடை செய்ய ஊடகங்களை பெரிய அளவில் உபயோகித்தனர். அப்போது ஒரு ஆராய்ச்சி செய்தனர்..குரங்குகள் தினமும் கஞ்சாவை புகைக்க வைத்து நடத்திய ஆராய்ச்சியில் நிறைய குரங்குகள் இறந்து போயின..அதை ஊடகங்கள் மூலம் பரப்பி மக்களுக்கு ஒரு பீதியை உருவாக்கியது அரசாங்கம்…ஆனால் உண்மை என்னவென்றால் கஞ்சாவை அதிக அளவில் வாரத்தில் ஒரே நாளில் புகைக்க வைத்து மூச்சு திணறி நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு குரங்குகள் இறந்து போயின..தினமும் புகைக்க வைக்க படவில்லை..அந்த உண்மைகள் வெளியில் வராமல் அரசாங்கத்தால் பாதுகாக்க பட்டது.

3. மருத்துவத்தில் அதற்கு என்று எந்த உபயோகமும் கண்டுபிடிக்கவில்லை..அதே சமயத்தில் ஆல்கஹால் .புகையிலைக்கும் எந்த உபயோகமும் இல்லை.

ஆனால் சில கனடா ஆராய்ச்சியாளர்கள் கஞ்சா கேன்சர் செல்களை அழிக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

Federal Drug Enforcement Agency (FDEA) அமைப்பு அமெரிக்காவில் கஞ்சாவை தடை செய்ததாக அறிவித்தது.அந்த ஆராய்ச்சிகள் அடிப்படையில் உலகம் முழுவதும் கஞ்சா தடை செய்யப்பட்ட போதை மருந்தாக அறிவிக்கப்பட்டது.இந்தியாவில் எத்தனையோ நூற்றாண்டுகளாக உபயோகத்தில் இருந்து வந்தாலும் இந்த தடை அமலுக்கு வந்தது.

1930 to 1933 அமெரிக்காவில் ஆல்கஹால் தடை செய்யப்பட்டபோது மிகப்பெரிய ப்ளாக் மார்க்கட் உருவாகி ஆல்கபோன் போன்ற புகழடைந்த,துணிவுடன் செயல்படும் மாபியாக்கள் தோன்றியது.அதனால் அரசாங்கம் திரும்ப ஆல்கஹாலை புழக்கத்துக்கு கொண்டு வந்து ப்ளாக் மார்க்கட் கொட்டங்களை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்தது.

ஒரு அரசாங்கத்தால் ஒன்றுக்கும் ஆபத்து இல்லாத கஞ்சாவையே தடை செய்த பொழுது..வருடத்திற்கு இருவது லக்ஷம் பெயர்களை காவு கொள்ளும் புகையிலையை ஏன் தடை செய்ய முனையவில்லை .

ஆப்கானிஸ்தான் உலக அளவில் போதை தலைமையமாக செயல்படுகிறது.புகையிலையை தடை செய்து கஞ்சாவை புகைக்கும் தடையை நீக்கினால் அங்கு நடக்கும் கஞ்சா போதை வியாபாரிகளின் கொட்டத்தை கொஞ்சம் அடக்க வாய்ப்பு இருக்கிறது…….
அரசாங்கங்கள் உலகெங்கும் தனக்கு சாதகமகவே முடிவை எடுப்பதால் புகையிலை மீதான தடை வருவதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியவில்லை..ஏதாவது ஹிப்பி இயக்கம் போல் புதிதாக தோன்றினால் வாய்ப்பு இருக்கலாம்.

இனி கட்டுரை சம்பந்தப்பட்ட உரலிகள்…

http://www.drugwarrant.com/articles/why-is-marijuana-illegal/

http://en.wikipedia.org/wiki/Legal_history_of_cannabis_in_the_United_States

வீடியோ லிங்க் ::http://www.youtube.com/watch?v=h6eJzbY_V3g

கிருத்திகா தரன்!

error: Content is protected !!