உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதிப் போட்டி ஜரூர்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதிப் போட்டி ஜரூர்!

சர்வதேச அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்ட உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் உருகுவே – பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. மற்றொரு காலிறுதியில் பிரேசில் – பெல்ஜியம் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலியிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. உருகுவே அணியை பொறுத்தவரை, போர்ச்சுகல் அணிக்கு எதிராக நாக்-அவுட்டில் 2 கோல்கள் அடித்து அசத்திய கவானி, காயத்தால் அவதிப்படுகிறார். எனவே, சவுரஸ்-ஐயே அந்த அணி அதிகம் நம்பியுள்ளது.

மேலும், இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் எதிரணியிடம் ஒரு கோல் மட்டுமே உருகுவே வாங்கியுள்ளது. இதுவே, அந்த அணியின் தற்காப்பு பலத்தை பறைசாற்றுவதாக உள்ளது. அதேவேளையில், பிரான்ஸ் அணியில், கிரீஸ்மன், பால் போக்பா, மாப்பே, ஆலிவர் ஜிரார்டு என தாக்குதல் தொடுக்கும் வீரர்கள் உள்ளனர். சமபலம் பொருந்திய இந்த அணிகள் மோதும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையலாம்.

இதையடுத்து, இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் – பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. பிரேசில் அணியில், நெய்மர், பிலிப் காட்டினோ, தியாகோ சில்வா, வில்லியன், மார்செலோ, பாலினோ நட்சத்திர வீரர்கள் நிரம்பியுள்ளனர். பெல்ஜியம் அணியிலும், லுகாகு,ட எடன் ஹசார்ட், பெல்லாய்னி உள்ளிட்ட சவால் அளிக்கும் வீரர்களும் உள்ளனர். இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இப்போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!