June 1, 2023

இளையராஜா இசையில் இசைப்பிரியா பற்றிய படம் “போர்க்களத்தில் ஒரு பூ” – ஆல்பம்

எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக கே.சி.குருநாத் சல்சானி தயாரிக்கும் படத்திற்கு “போர்க்களத்தில் ஒரு பூ” பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா நடிக்கிறார்.இவர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கதாப்பாத்திர மேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – பார்த்திபன்.. இவர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் உதவியாளர். இசை – இளையராஜா.படம் பற்றி இயக்குனர் கு.கணேசனிடம் கேட்டோம் … இலங்கையில் படுகொலை செய்யப் பட்ட ஊடகவியலாரான இசைபிரியாவின் குழந்தை பருவம் முதல் இளமைப் பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலை வரை கதையாகப் பட்டிருகிறது. நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கொண்ட படமாக “போர்க்களத்தில் ஒரு பூ” உருவாகிறது. படத்தின் கதையோட்டத்திற்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. சொல்லப் போனால் இசைபிரியாவின் வாழ்கைக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது என்றார் கு.கணேசன்.