” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.”

” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.”

சாதி ஒழிய பாடுபட்ட அம்பேத்காரை கூட ஒரு சாதி கூட்டம் தங்களுக்கு மட்டும் உன்டானவர் என்று போற்றி புகழ்கிறது. சாதிக்கொடுமை / இரட்டை குவளை என்ற பேச்சை எடுத்தாலே தேர்ந்தெடுத்த அரசியல் வியாதியை போலவே ஒரு திராவிட கும்பல் தாரை தப்பட்டையுடன் கிளம்பி இது பார்பணன் செயல் என்று கோஷமிடும். இங்கே படத்தில் இருக்கும் இரண்டு காட்சியும் அம்பாள் கஃபேயிலோ அல்லது அம்பீஸ் பிராமனாள் ஹோட்டலிலோ எடுக்கபட்டது அல்ல – அற்ப பதரே எதையோ பார்த்து சூடு போட்டு கொண்ட புஸி கேட் போல தான் ஒரு சாதி தான் ஒரு படி மட்டம் அதனால் நம்மை விட மட்டமான ஒரு சாதியை நாம் இன்னும் மட்டம் செய்தால் தான் நம் சாதி பவரை காட்ட முடியும் என பவர் ஸ்டார் சிந்தனை போல மன நிலை கொண்டவர்கள் தான் இந்த நாட்டில் பல பேர்.
nov 31 - ravi caste
இரட்டை குவளை / கக்கத்தில் துண்டு / இடுப்பில் துண்டு / காலில் இருக்க வேண்டிய செருப்பு கையில் இருக்கிற அவலம் / ஊருக்கு நடுவே சுவரு / சிலர் இறந்தால் அருகே இருக்கும் இடுக்காட்டுக்கு கூட ஊரை சுற்றி செல்லும் அவலம் – இதெல்லாம் சோமாலியாவிலும் கூட இல்லை நம்ம ஊரில் தான். மேல் கூறிய அத்தனையும் அக்ரகாரத்தில் நடக்கிறதா என்றால் அங்கும் இல்லை.

வேறு எங்குதான் நடக்கிறது என்று நன்கு உற்றூ பார்த்தால் தெரியும் கருமம் புடிச்ச உங்க, எங்க ஊரில் தான். ஒரு காலத்தில் வியாதிஸ்கர்கள் உள்ளே வரக்கூடாது என இருந்த பலகை இப்போது இவர்களுக்கு வேண்டா வெருப்பாய் குடிக்கும் குவளையில் இருந்து தூர எறியும் இலை முதல் உண்டு எனில் இவர்கள் இரண்டாம் கெட்ட மனிதர்கள் அல்ல இரண்டாம் தர மனிதர்கள் தான்.

பார்பணன் ஒழிக / ஆரிய சக்தி சூழ்ச்சி இது தான் உடனே வெளி வரும் வசனம். ஊருக்கு நடுவே கட்டிய ஜாதி சுவரை எந்த ஐயர் கட்ட சொன்னாரு – எந்த ஐயங்கார் ஹோட்டலில் இந்த மாதிரி உணவோ அல்லது பானமோ தரச் சொன்னார்கள். சில முட்டாப்பசங்க சொன்னா அதையே படித்த நீங்களும் நானும்? ஆம் இது ஆர்ய சக்தி வேலைதான்ன்னு கும்பலோடு கோவிந்தா போடும் நாம் பதரா? அவர்கள் அரை மார்க் ஒரு மார்க்ல சனியன் புடிச்சா உயர்ந்த சாதினாலே சீட் கிடைக்காம வாழ்க்கையே மாறி போய் கோவிலின் வெளியே கிடைக்கும் பிச்சைக்காரர்களின் தட்டின் கலெக்ஷ்னில் கால் வாசி கூட கிடைக்காம அரை வயிரும் கால் வயிருமா தேங்கா முடில அரை வயிறும் கால் வயிறுமா காலத்தை ஓட்டுகிற அம்பிகளா உங்களுக்கு இந்த பிரச்சினை கொடுப்பது?

சிந்திக்க தெரிந்த நாம அதை செயல்படுத்த தெரியாம நாமும் அடுத்த ஆட்டின் பிட்டத்தை நோக்கியே பயணிக்கும் ஆட்டுமந்தை பழக்கம் இன்னும் நம்மிடம் உள்ளது என்றால் அது ஆரிய சக்தியுமில்லை ஆரியமாலா சக்தியுமில்லை.

என்று படிப்பு என்ற ஒன்றுக்கு மெரிட் பேஸிஸில் இடம் கொடுக்காமல் சாதி சான்றிதழ் அடிப்படையில் கொடுக்க அரசு முனைந்ததோ அன்றே ஆர்ம்பித்து விட்டது இந்த சாதிக்கொடுமை. அதை தூக்கி நிறுத்துவது அரசியல் வியாதிகள். எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால் இவர்களின் கொட்டம் அடங்கிவிடும். ஆயிரம் சொல்லுங்கள் ரவி சாதி இல்லாமல் உலகத்தில் ஒன்னும் நடக்காது அதனால் நீங்க வேணா ஃபேஸ்புக்ல எழுதலாம் ஆனா சாதி தான் எனக்கு முக்கியம்னு சொல்ற கான்ஸ்டிபேஷன் ஆட்களுக்கு ஒரு கேள்வி – சாதி பார்த்து கல்யாண்ம் ப்ன்றீங்க ஒகே – சாதி ஸ்கூல்ல தான் சேக்குறீங்களா / உங்க சாதிக்காரன் ஹோட்ட்டல்ல தான் சாப்பிடுறீங்களா / சாதிக்காரன் விற்பனையாளரா இருக்கும் டாஸ்மாக்கில் தான் சரக்கடிக்கிறிங்களா / சாதிக்காரன் ஹாஸ்பிட்டல்ல தான் மருத்தவம் பாக்குறீங்களா / அவசரத்துக்கு தேவையான கடன் / ரத்தம் சாதிக்காரன்கிட்ட மட்டும் தான் வாங்குறீங்களா – மனசை தொட்டு பதில் சொல்லுங்க

இதில் எதும் செய்யாத நீங்கள் உங்களை விட சற்றே தாழ்ந்தவரிடம் மட்டும் உங்களின் பேடித்தனமான வீரத்தை காட்ட முயல்வது ஏன்? சாதிச்சாக்கடைகளை ஒழிப்பது கடினம் ஆனால் இங்கு படித்த தலைக்கனம் இல்லாத சற்றும் காழ்ப்புணர்ச்சி இல்லாத சமூகத்தில் நீங்கள் இருந்தால் பிறப்பால் அல்ல உங்கள் மதியால் நீங்களும் ஒரு உயர்ந்த மனிதன் என்று புகழப்படுவீர் நாமும் அதை நோக்கி பயணிப்போம் என்று கூறி அருமையான ஒரு ஞாயிற்றை கொண்டாடி மகிழுங்கள்.

இரன்டில் ஒரு பட உதவி – பெயர் போட விரும்பாத ஃபேஸ்புக் நண்பர் (அவரே எடுத்தது).

Related Posts

error: Content is protected !!