இந்திய வனத்துறையில் பணி வாய்ப்பு!

இந்திய வனத்துறையில் பணி வாய்ப்பு!

இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ifs
தேர்வு அறிவிப்பு எண்: 10/2014-IFoS

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31.05.2014

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination,2014

வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 21-32-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, Forestry போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், புதுச்சேரி , திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட 59 மையங்களில் நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் உரிய செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014

மேலும் எழுத்துத் தேர்வுக்கான விளக்கங்கள், பாடமுறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!