இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்!

இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்!

காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என்றும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்ததையுடுத்து என் வாழ்நாளில், இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் சவால் விட்டுள்ளார்.

நேற்று nov 34 - kasmirகாஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர்,”காஷ்மீரை மையமாக கொண்டு இந்தியா,பாகிஸ்தான் நாடுகளிடையே எந்நேரமும் 4வது முறையாக அணுஆயுத போர் நடைபெறும்; இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளது; அதனால் பாகிஸ்தானும் அதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது; காஷ்மீர் பிரச்னையை அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்க்க வேண்டும் எனவும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா., தெரிவித்துள்ளது; ஆனால் இது நடக்காத காரியம்; இந்திய எல்லையில் பாக்., படைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளது”என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

இப்படியொரு செய்தி பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகை ஒன்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து நவாஸ் ஷெரீப் அலுவலகம் உடனடியாக அச் செய்தியை மறுத்தது. ‘இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது, தீய உள்நோக்கம் கொண்டது. நவாஸ் ஷெரீப் இந்த வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான எந்த பிரச்சினைக்கும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதே நவாஸ் ஷெரீப்பின் கருத்து’ என்றெல்லாம் நவாஸ் ஷெரீப் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது.

இதற்கிடையில் நவாஸ் ஷெரீப் பேச்சு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் “–என் வாழ்நாளில், இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பு இல்லை”.என்று அவர் கூறினார்.

No scope of Pakistan winning a war: Manmohan Singh

Related Posts

error: Content is protected !!