இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸுக்கு சாதகமாக பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை கிளாரன்ஸ் ஹவுஸ் அறிவித்தது. 71 வயதான இளவரசர் சார்ல்ஸ் கொரோனா வைரஸ் குறித்த லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளார். ஆயினும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
சார்ல்ஸ் மற்றும் கமிலா இருவரும் இப்போது பால்மோரலில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். பக்கிங்ஹாம் அரண்மனை இது குறித்து குறிப்பிட்ட போது, மார்ச் 12 அன்று ராணி தனது மகனைப் பார்த்ததாகக் கூறினார், ஆனால் அவரும் ‘நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்’. என்று குறிப்பிட்டது.
மேலும், ராணி ‘அவரது உடல் நலன் தொடர்பாக பொருத்தமான அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றுகிறார்’ என்று அரண்மனை செய்திகள் குறிப்பிடுகின்றன. கிளாரன்ஸ் ஹவுஸ் அறிக்கை யில், ‘அரசாங்க மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு இணங்க, இளவரசரும் டச்சஸும் இப்போது ஸ்காட்லாந்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ‘சோதனைகள் அபெர்டீன்ஷையரில் NHS ஆல் மேற்கொள்ளப் பட்டன! அவை சோதனைக்குத் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தன.
‘இளவரசர் அண்மையில் தனது பொது வாழ்க்கையில், அதிக ஈடுபாடு காட்டினார். பலரை சந்தித்தார். எனவே எவரிடமிருந்து வைரஸைப் பிடித்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.’ இளவரசரின் கடைசி பொது நிகழ்ச்சி மார்ச் 12 அன்று நடந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் இருக்கிறார்.
ஹைக்ரோவ் மற்றும் டச்சி நபர்களுடன் அவர் பல தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தியதாக பத்திரிகை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.
சமீபத்திய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தில் இப்போது 8,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் கேஸ்கள் உள்ளன – இருப்பினும் உண்மையான எண்ணிக்கையிலான கேஸ்கள் மிக அதிகமாக இருக்கலாம். அவர்களில் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.