ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனராக முகமது ஜுபைர் மீது மேலும் 3 வழக்குகள்!

ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனராக முகமது ஜுபைர் மீது மேலும் 3 வழக்குகள்!

ல்ட் நியூஸ் செய்தித்தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைரை மேலும் 14 நாட்களுக்கு விசாரணைக்கு எடுக்க டெல்லி காவல்துறை அனுமதி கோரியுள்ளது.

போலிச்செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் செய்தித்தளமாக அறியப்பட்ட ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனராக முகமது ஜுபைர் பணியாற்றி வந்தார். நுபுர்சர்மாவின் சர்ச்சைக் கருத்தை முதன்முதலில் ஜுபைர் தனது தளத்தில் விமர்சித்த பின்னரே பிரச்னை பூதாகரமானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் டுவிட்டர் பதிவு செய்ததாக சமீபத்தில் ஜுபைர் கைது செய்யப்பட்டார்.

இவரின் கைதுக்கு நாடு முழுவதும் பல்வேறு பத்திகையாளர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஐநாவும் இந்நடவடிக்கையை கண்டித்தது. தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட 4 நாட்கள் விசாரணைக் காலம் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, மேலும் 14 நாள் விசாரணைக்கு டெல்லி போலீசார் உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது, ஆதாரங்களை அழிக்க முயன்றது, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிய வழக்குகளும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!