ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த ஆன செலவு எவ்வளவு தெரியுமோ?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த ஆன செலவு எவ்வளவு தெரியுமோ?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த ரூ. 3 கோடியே 2 லட்சம் செலவிடப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனால் அவர் எம்.எல்.ஏ.வாக பதவிவகித்து வந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த ரூ. 3 கோடியே 2 லட்சம் செலவிடப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், வழக்கமாக ஒரு இடைத்தேர்தல் நடத்த சுமார் 70 லட்சம் வரை செலவாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக ரூ. 3,02,64,386-ஐ தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது. இத்தேர்தலுக்காக வழக்கத்தைவிட 3 மடங்கு கூடுதல் செலவாகியுள்ளது. மேலும் முறையாக கணக்கு காட்டப்பட்டதால் தேர்தலின் போது பிடிபட்ட ரூ.27 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!