ஆதார் அட்டை திட்டம் அம்போ…!?

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் அட்டை மூலம் மத்திய அரசு மானியங்களை வங்கி வழியாக நேரடியாக மக்களுக்கு சென்றடையும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக பலகோடி ரூபாய் மதிப்பில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.அனைத்து தேவைகளுக்கும் இதை தேசிய அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மானியங்களை வங்கி மூலம் பெறவும் ஆதார் அட்டை தேவை என்று முந்தைய அரசு அறிவித்தது.என்றாலும் ஆதார் அடையாள அட்டை நாடு முழுவதும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஒருசில மாநிலங்களில் ஆதார் அட்டை மூலம் மத்திய அரசின் மானியங்களை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. என்றாலும் அனைவருக்கும் இதன் பயன் கிடைக்கவில்லை.இந்நிலையில் இந்த அட்டை திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஆதார் அட்டை திட்டம்எழுத்துப்பூர்வமான ஒப்புதலின்றி ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்களை எந்த ஒரு அரசு அதிகாரிக்கும் அளிக்க கூடாது. அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு ஏதாவது உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் கொண்டு வரப்பட்டது. இத் திட்டத்தை செயல்படுத்த தனி ஆணையமெல்லம் அமைக்கப்பட்டது.அதே சமயம் இந்த ஆணையம் சட்ட அங்கீகாரம் இன்றி தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து இதுதவிர ஆதார் அட்டை திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த கோர்ட் அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆதார் அட்டை திட்டத்தை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்த மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அண்மையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதார் அட்டை திட்டத்தைக் கைவிட பெரும்பாலானோர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. அச்சுதன் சில நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.), ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்பட்ட ரகசிய தகவல்களை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த சர்ச்சையையடுத்து ஆதார் அட்டை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் அதே நேரம் இதற்கு மாற்றாக அனைத்து குடிமக்களுக்கும் பன்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.