ஆட்ட கத்தி’ தினேஷ் நடிக்கும் ‘திருடன் போலீஸ்’ மினி ஆல்பம்

ஆட்ட கத்தி’ தினேஷ் நடிக்கும் ‘திருடன் போலீஸ்’ மினி ஆல்பம்

தமிழ் திரை உலகில் சில வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய எஸ்.பி. பி சரண் , ஜே . செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம் ‘திருடன் போலீஸ்’. பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி , பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகை சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட ‘ திருடன் போலீஸ்’ படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது.

கம்ப்யூட்டர் தொழில் நுட்ப காட்சிகளில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.’ ஆட்ட கத்தி’ தினேஷ் கதா நாயகனாக நடிக்க , அவருக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கு நிலையான பெயரை நிலை நிறுத்தி கொள்ள மென கெடும் தினேஷுக்கு ‘ திருடன் போலீஸ்’ ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்.நித்தின் சத்யா,பால சரவணன், ‘ நான் கடவுள்’ ராஜேந்திரன் , ஜான் விஜய் ,ஆகிய நால்வரும் இந்த கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூண்களாகி உருவாக்கி இருக்கும் ‘ திருடன் போலீஸ் ‘ ஜூலை மாதம் இறுதியில் வெளி வருகிறது.

error: Content is protected !!