அரசு செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ்…

அரசு செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ்…

தமிழகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் நடத்தி வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.தமிழக சுகாதாரத் துறை செலாயளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், செவிலியர்களின் கோரிக்கைளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், அதனால் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் செவிலியர்கள் கூறியுள்ளனர்.
NURSES_STRIKE
அரசு நர்சிங் கல்லூரி களில் தனியார் கல்லூரியில் படித்த மாணவிகளை அனுமதிக்க கூடாது. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவிகளின் ஐந்தாம் நாள் போராட்டமும், நுழைவு வாயில் உடைப்பு, சாலை மறியல், உண்ணாவிரதம் என்று விஸ்வரூபம் எடுத்துள்ளதால், மருத்துவ துறை வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை செலாயளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், செவிலியர்களின் கோரிக்கைளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், அதனால் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் செவிலியர்கள் கூறியுள்ளனர்.