June 1, 2023

அமெரிக்க கடற்படை தளத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:13 பேர் பரிதாப சாவு!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் ராணுவ உடையில் வந்த மூன்று மரம் நபர்கள் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். கடுமையான பாதுகாப்பான பகுதியான இங்கு அதிரடியாக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள், போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று தெரிய வருகிறது.
sep 17  wasington shoot
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடற்படை தளம் உள்ளது. கடற்படை தலைமை அலுவலகமான இதுதான், கடற்படையின் அனைத்து கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றை வாங்குவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இங்கு 3,000க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை அமெரிக்க நேரப்படி 8.20 மணிக்கு திடீரென அங்கு துப்பாக்கிச்சூடு நடந்தது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக அங்கு அதிரடிப்படையினர், கடற்படையின் சீல் பிரிவு வீரர்கள் என அனைத்து பிரிவுகளை சேர்ந்த படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், கடற்படை தலைமை அலுவலகத்துக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டன.ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மேலும், கடற்படை தலைமை அலுவலகத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் அதிரடிப்படை வீரர்கள் களம் இறக்கப்படுவதும் வெளியே இருந்து தெரிந்தது.

இந்நிலையில், கடைசியாக கிடைத்த தகவலின்படி, கடற்படை தலைமை அலுவலகத்தில் 3 மர்ம நபர்கள் திடீரென ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 13 பேர் இறந்ததும், மேலும், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததும் தெரிய வந்துள்ளது. தாக்குதல்நடத்திய 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் 13 பேர் உயிரிழந்ததை நகர மேயர் வின்சென்ட் கிரேவும், நகரின் காவல்துறைத் தலைவர் கேத்தி லேனியரும் உறுதிப்படுத்தினர். “”சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நபரைத் தவிர மேலும் 2 நபர்களும் ஆயுதங்களுடன் வந்தது குறித்து மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களில் ஒரு நபர் 40-50 வயதுடைய வெள்ளையினத்து நபர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இருவரையும் தீவிரமாகத் தேடி வருகிறோம்” என்று கேத்தி லேனியர் தெரிவித்தார்.

இத்தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு போலீஸ் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டார். இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Washington Navy Yard shootings: At least 13 dead in D.C. bloodbath
***************************************************************************************
Thirteen people are dead and more are injured after at least one gunman armed with assault rifles opened fire at the Washington Navy Yard in D.C. early on Sept. 16, 2013. A Texas man has been identified as at least one of the shooters responsible for the massacre. Aaron Alexis, a civilian contractor and former Navy reservist, apparently used the identification of a man who used to work at the base to get past security, sources said. Alexis was killed by police. Authorities were looking for one more potential suspect, officials said.