அமெரிக்க அழகியான இந்திய பெண்!- அப்செட்டான அமெரிக்கர்களின் அத்துமீறல்!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் நீனா, அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். . இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும்.இதற்கிடையில் அமெரிக்கர் அல்லாத, பொன்னிற கூந்தல் இல்லாத நீல நிறக்கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தேர்ந்தெடுத்ததை சிலர் விரும்பவில்லை. அவர் குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.அவை இனவெறியை தூண்டுபவையாக உள்ளன. அவற்றில் சிலர் இவரை அரேபியர் என்றும் கூறியுள்ளனர். இவரை அமெரிக்கர் என எற்றுக் கொள்ள முடியாத என்றும், இவர் அழகியாக தேர்வு பெற்றதை நம்ப முடியவில்லை என்றும் கேலி கிண்டல் செய்துள்னர்.அரேபியர் ஒருவர் மிஸ் அமெரிக்கா ஆகிவிட்டார் என்றும் கூறிய ஒரு நபர் இவரை அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபடுத்தி தீவிரவாதி என்றும் வர்ணித்துள்ளார்.
மிஸ் அமெரிக்கா 2014 அழகிப் போட்டி நியூ ஜெர்சி மாநிலத்தின் அட்லான்டிக் நகரில் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 53 அழகிகள் கலந்து கொண்டனர். மிஸ் நியூயார்க் அழகியான நீனா தவுலூரியும் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது தந்தை அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். ஆடை அலங்காரம், லைப் ஸ்டைல், திறமை, இன்டர்வியூ உட்பட பல பிரிவுகளில் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நியூயார்க் அழகி நீனாவிடம், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கண் அமைந்திருக்கும் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது தோற்றத்தை மாற்றம் செய்தது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நீனா, ‘‘பிளாஸ்டிக் சர்ஜரியில் தனக்கு உடன்பாடில்லை என கருத்து தெரிவித்த நீனா, ஒருவர் தனது சொந்த தோற்றத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’’ என பதில் அளித்தார். திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் பாலிவுட் ஸ்டைல் நடனம் ஆடி நடுவர்களை கவர்ந்தார்.
போட்டியின் முடிவில் மிஸ் அமெரிக்காவாக நீனா தேர்ந்தெடுக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டார். இவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.31 லட்சம்) பரிசு கிடைத்துள்ளது. 2வது இடத்தை கலிபோர்னியா அழகி கிரிஸ்டல் லீயும், 3வது இடத்தை ஒக்லகாமா அழகி கிரிஸ்வோல்டும் வென்றனர். மிஸ் நியூயார்க் அழகியாகவும், மிஸ் அமெரிக்கா அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் என்பதில் பெருமிதம் கொள்வதாக’ நீனா கூறினார்.
இதற்கிடையில் அமெரிக்கர் அல்லாத, பொன்னிற கூந்தல் இல்லாத நீல நிறக்கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தேர்ந்தெடுத்ததை சிலர் விரும்பவில்லை. அவர் குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.அவை இனவெறியை தூண்டுபவையாக உள்ளன. அவற்றில் சிலர் இவரை அரேபியர் என்றும் கூறியுள்ளனர். இவரை அமெரிக்கர் என எற்றுக் கொள்ள முடியாத என்றும், இவர் அழகியாக தேர்வு பெற்றதை நம்ப முடியவில்லை என்றும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.அரேபியர் ஒருவர் மிஸ் அமெரிக்கா ஆகிவிட்டார் என்றும் கூறிய ஒரு நபர் இவரை அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபடுத்தி தீவிரவாதி என்றும் வர்ணித்துள்ளார்.
Miss America 2014 Nina Davuluri ‘so proud to be the first Indian Miss America’
*************************************************************************************************