அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் – பிடன் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இரு கட்சி சார்பிலும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேர் பங்கேற்கும் மூன்று விவாத நிகழ்ச்சிகளும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் பங்கேற்கும் ஒரு விவாத நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை அதிபர் தேர்தல் விவாத ஆணையம் நடத்திவருகிறது.