அமெரிக்காவில் மீண்டும் கறுப்பின வாலிபர் போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாக பலி!

அமெரிக்காவில் பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் கருப்பின மக்கள் என்று அழைக்கப்படும் ஆப்ரோ அமெரிக்க மக்கள் பல கோடி பேர் வசிக்கிறார்கள். எப்போதும் போலீசார் எந்த குற்றம் நடந்தாலும் இந்த ஆப்ரோ அமெரிக்க மக்களை கைது செய்வதும், குற்றஞ்சாட்டுவதும் வழக்கம்.அமெரிக்காவில் இப்படி ஆப்ரோ அமெரிக்க மக்கள் பலர் போலீசால் என்கவுண்டர் செய்யப்படுவதும் வழக்கம்.. அந்த வகையில் கடந்த 2020ல் ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலையான சம்பவத்தின் வடுமே இன்னும் மறையாத சூழலில் இன்னொரு கறுப்பினர் கொலையான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெபிஸ் நகர் பகுதியில் வசிச்சு வந்தவர் டயர் நிக்கோலஸ். இவருக்கு வயசு 29 இவர் போன ஜனவரி 7ம் தேதி நைட் தன்னோட வாகனத்தை வேகமாக செலுத்திட்டு போனாரம். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவரை காரில் துரத்தி போனாய்ங்க. அவரை சுற்றி வளைச்ச காவல்துறையினர் 5 பேரும் காரில் இருந்து இறங்கியவுடன் டயர் நிக்கோலஸை கடுமையாக அடிக்கத்தொடங்கிட்டாய்ங்க
மேலும் டயர் நிக்கோலஸை தரையில் படுக்கும் படி கூறினர். இதையடுத்து தரையில் படுத்த டயர் நிக்கோலஸ் மீது காவல் துறையினர் தங்கள் பூட்ஸ் காலால் மிதிக்க தொடங்கினாய்ங்க. அவரது கைகளை பின்னால் கட்டு என்று கத்தியவாறே அவரை கடுமையாக தாக்கினாய்ங்க.
இதையடுத்து வலிதாங்க முடியாமல் டயர் நிக்கோலஸ் கதறி உள்ளார். வலிதாங்க முடியாமல் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்ப முயன்றார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் டயர் நிக்கோலஸ் மீது மின்சாரம் செலுத்தும் கருவியால் மின்சாரத்தை பாய்ச்சி கெடூரமாக சித்தரவதை செய்கின்றனர். அப்போது டயர் நிக்கோலஸ் மயங்கி சரிந்ஞ்சுட்டார்.
அப்பாலே அவரை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் காவல்துறையினரின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி உள்ளது.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டயர் நிக்கோலஸ் சிகிச்சை பலனின்றி 3 நாட்களில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 5 போலீசாரும் கைது செய்யப்பட்டனர்.
https://twitter.com/JFlippo1327/status/1619142009897496576
தாக்குதல் நடத்தி கைதான 5 போலீசாரும் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட டெமட்ரியஸ் காலி, டடாரியஸ் பீன், டெஸ்மாண்ட் மில்ஸ் ஜூனியர், ஜஸ்டின் ஸ்மித், எம்மிட் மார்டின் ஆகிய ஐந்து போலீசார் மீது கொலை குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..
இதை அடுத்து இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.