அக்னிபத் – ஒரு கருடப் பார்வை!

அக்னிபத் – ஒரு கருடப் பார்வை!

ந்திய ராணுவத்தில் சேர்ந்தால் 21 வருட சர்வீஸ், ப்ளஸ் ரிடையர்மெண்ட் பயன்கள், பென்சன், ex servicemen benefits. இதுதான் இத்தனை வருடங்களாக இருந்த நடைமுறை. இந்த நடைமுறையில் பென்ஷன் உட்பட, post retirement benefits அரசுக்கு, எந்த அரசாக இருந்தாலும் அதற்கு மிகப் பெரும் சுமை. அதை சமாளிக்க மக்கள் உபயோகிக்கும் பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டி வரும்!

இந்த நிலையில் மத்திய அரசு இந்த பொருளாதாரச் சுமையை 75% வரை குறைக்கக் கொண்டு வந்த திட்டம் அக்னிபத். இதை அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனினும் இதுதான் அதன் உள்ளர்த்தம். இந்த திட்டம் மூலம் 25% பேர்கள் நிரந்தரப் பணியாளர்களாக ஏற்கப் படுவார்கள். 75% பேர்கள் 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு, காண்ட்ராக்ட் முறையில் பணி அமர்த்தப் பட்டு, சம்பளம், படி, மற்றும் நாலாம் வருட முடிவில் ஒரு முதிர்வுத் தொகை, பணியில் இருக்கும்போதே அவர்களுக்கு விருப்பமான படிப்பு, படித்து வெளியேறியதும் சொந்தமாக தொழில் தொடங்க கடன்…. மத்திய அரசின் வேலைக்கு 3% உத்திரவாத முன்னுரிமை!

இது அத்தனையும் நாலு வருடம் பணி செய்தவர்களுக்கு.

இனி ஏன் போராட்டம் என்பது பற்றிப் பார்ப்போம்!

– ‘உனக்கு வயசானா என்ன? உன்னை வெச்சு ஔவையார் படம் எடுக்கிறேன்!’ என்று நாகேஷ் சொல்வது போல, அவர்களை 21 வருடமும் பணியில் இருத்தி, முதுமையானதும் அனைத்து பண உதவிகளும் தந்து, பென்ஷன் தந்து, exserviceman வசதிகளும் வேண்டுமாம்.

‘நான்கு வருடங்களுக்குப் பின் எங்களது எதிர்காலம் கவலைக்குரியதாக ஆகி விடும்!’

அதை விடுங்க! போராடும் இந்தக் கூட்டம் எது?

எங்கெங்கு எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ளதோ அங்கு. போராட்டக்காரர்கள் அனைவரும் SFI கம்யூனிஸ்ட் இயக்கம். இப்போது பின்புலம் யாரென்று தெரிந்திருக்கும். தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காத கும்பல். திட்டத்தில் சேர்ந்து விட்டவன் போராடினால் கூட அர்த்தம் உள்ளது. சம்பந்தமே இல்லாதவன் ரயிலைக் கொளுத்தறான். இதை ஊதிப் பெருசாக்கும் ஒரு நாசகாரக் கும்பல். அவர்களுக்கு இடப்பட்ட டூல்கிட் மாநிலம் மாநிலமாக இந்த விஷ விதையை விதைத்துப் போராட்டத்தை வீரியப் படுத்த வேண்டும்.

சரிடா! உன் வாழ்க்கை சீராகாது என ஏன் கருதுகிறாய்?

‘என்னால் படிக்க முடியாது. பாஸ் பண்ண முடியாது. ஆனால் எனக்கு அரசு வேலை வேணும். அதுவும் நிரந்தர வேலை. வருஷா வருஷம் இன்க்ரிமெண்ட் வேணும். பணி முடிந்ததும் மொத்தப் பணம் வேணும். பென்சன் வேணும். நான் பென்ஷன் வாங்கிச் செத்தால் என் மனைவிக்கு குடும்பப் பென்ஷன் கொடுக்க வேணும்!… தவிர மிலிட்டரி கேன்டீனில் சகாய விலையில் சாராயம் முதல், ஃப்ரிட்ஜ், மருந்து, குக்கர் போன்றவை மானிய விலையில் கொடுக்க வேண்டும்!’

சரி… வெண்டைக்காயை உடைச்சு வாங்கிற உனக்கு இந்த வேலை செய்ய தகுதி, திறமை இருக்கா?

‘அதெல்லாம் பேசக் கூடாது! நாலு வருஷத்திலே நான் இஞ்சினியருக்கு படிச்சு பெரிய ஆளாப் போயிருப்பேன்.’

அப்போ எதுக்குடா ராணுவத்திலே படிப்பும் இல்லாதவனும், நாளைய அப்துல் கலாமும் சேரத் துடிக்கிறீங்க? ராணுவத்திலே சேராமலேயே சர் சி பி ராமசாமி அய்யராவோ, அய்யா அப்துல் கலாமாகவோ நேரடியாக மாறிட்டுப் போயேன்? பொது மக்கள் வரியைக் கொண்டு ஏன் நீ உல்லாச வாழ்க்கை வாழ நினைக்கிறே?

போராடும் பீகார்க்காரனில் படித்தவன் ஒருத்தனையாவது சென்னையிலே பார்த்திருக்கீங்களா? எந்த பீகார் டாக்டரையோ, இஞ்சினியரையோ, சார்ட்டட் அக்கௌண்டண்டையோ நீங்கள் சந்தித்தது உண்டா? 10 ஆம் கிளாஸ் பரிட்சையை ஜன்னல் வழியே பிட் வாங்கி பரிட்சை எழுதினவன்தான் இப்போ போராடறான். ரயிலை எரிக்கிறான்…

இப்போது சொல்லுங்கள்… உங்கள் ராணுவம் யார் கையில் இருக்க வேண்டும் என்று!

இப்போது சொல்லுங்கள் தகுதியற்றவனின் போராட்டங்களை நீங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று.

உங்கள் வரிச்சுமையை நீங்களே கூடுதலாக்கிக் கொள்வீர்களா?

இங்கே தமிழ்நாட்டில் இஞ்சினியரிங் படிச்சுட்டு பத்தாயிரம் பதினைந்தாயிரம் ரூபாய் வேலைக்கு அல்லாடறான்.

பீடா வாயனிடம் பானிபூரி திங்கலாம். துப்பாக்கியைத் தரக்கூடாது!

படிச்சு பட்டம் வாங்கினவன் போராடறதில்லை… போலி சர்ட்டிஃபிகேட், ஜன்னலில் பிட், புத்தகம் காப்பி இவனுக்கு வேறென்ன வரும்? போலி துப்பாக்கி செய்யத் தெரியும். போலி பட்டங்களைத் தந்து MFL மற்றும் ஐசிஎஃப்பில் வேலைக்குச் சேர்ந்தானுங்க… போலி நீட் சர்ட்டிஃபிகேட் செஞ்சு தந்தானுங்க…. தமிழ்நாட்டில் படித்ததாகவே போலிச் சான்றிதழ் தந்து வேலைக்குச் சேர்ந்தவர்கள் 456 பேரை கொஞ்ச நாள் முன் தமிழக அரசு பணியிலிருந்து நீக்கியது கவனம் இருக்கட்டும். இவனுங்களா ராணுவத்திலே சேர்ந்து நம்மைக் காப்பாத்தப் போறானுங்க?

இந்த நாட்டின் அழிவு கம்யூ தொழிற்சங்கங்களாலும், பீகாரிகளால் மட்டுமே இருக்கும். இந்தப் போராட்டங்களின் பின் துணை வீணாய்ப் போன கம்யூ மற்றும் அரசை விமர்சிப்பவர்கள்தான்.

தமிழக அரசோ, கேரள அரசோ, ஆந்திர அரசோ ஏன் அக்னிபத்தை எதிர்க்கவில்லை?

நாளை இதே டெம்ப்ளேட்டை வைத்து தங்களது செலவையும் குறைக்க முடியும் என நம்புவதால்…இந்தத் திட்டத்தால் பலன் என்ன என்பதை விட, கண்ணை மூடிக் கொண்டு மோடியை எதிர் என்பதே… அந்தக் கூட்டத்தில் முதல் ஆள் கெஜ்ரிவால்….ஒரு அற்புதமான திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு தகுதியற்றவன் எதிர்ப்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

டிமி

error: Content is protected !!